ஓய்வூதியக்காரர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம் ஜூலையில்

2019ம் அண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் ஓய்வூதியக்காரர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம் ஜுலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற 5 இலட்சம் பேர் இதன்மூலம் ஓய்வூதிய சம்பள அதிகரிப்பைப் பெறுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதன் கீழ் ஓய்வூதியக்காரர்களின் மாதாந்த சம்பளம் 2800 மற்றும் 24 ஆயிரம் ரூபாவுக்கும் இடையில் அதிகரிக்கும். 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதிய சம்பளத்தில் நிலவிய முரண்பாடு நீக்குவதன் ஊடாக ஓய்வூதியக்காரர்களுக்கு நிவாரணம் கிடைக்கின்றது.

downloadஇதற்கமைவாக ஓய்வூதியம் பெற்ற அலுவலகப் பணியாளர் உதவியாளர் தரம் ஒன்று ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் 2800ஆல் அதிகரிக்கிறது. முகாமைத்துவ உதவியாளர் தரம் 1 ஓய்வூதியக்காரர்களுக்கு 5 ஆயிரத்து 200 ரூபாவால் சம்பளம் அதிகரிக்கிறது. ஆசிரிய சேவையில் தரம் ஒன்றில் ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் 9,200 ஆல் அதிகரிக்கிறது.

அரசாங்க தகவல் திணைக்களம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435