2016 – 2020 ஓய்வு பெற்றோருக்கு உரித்தான ஓய்வூதியம் அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (08) நாடு முழுவதும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஓய்வு பெற்றோரின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் அமைப்பாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் ஓய்வூதியத்தைப் வழங்குமாறு கோரி கடந்த காலங்களில் நாடு தழுவியரீதியில் போராட்டங்கள், தௌிவுபடுத்தல்கள், எதிர்ப்பு நடவடிக்கைள் என்பன முன்னெடுக்கப்பட்டபோதிலும் அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் தன்னிச்சையாக நடந்துகொள்வதாக மஹிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றுமுன்தினம் (06) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தௌிவபடுத்தப்பட்டது.
அதற்கமைய, கொழும்பில் முன்னெடுக்கப்படும் போராட்டம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவும், கண்டியில் டொரின்டன் பார்க்கிலும், காலி பஸ் நிலையம், குருணாகலை மணிக்கூட்டுக் கோபுரம் அருகே, கம்பஹா புகையிரத நிலையம் முன்பாக, இரத்தினபுரி மணிக்கூட்டுக் கோபுரம் அருகே, மாத்தறை பஸ் நிலையம், அநுராதபுரம் கச்சேரி சந்தி, களுத்துறை நகரம், மாத்தளை நகரம், மொனராகலை கச்சேரி சந்தி, கேகாலை நகரம், தங்கல்ல பஸ் நிலையம், பதுளை மாகாணசபை முன்பாகப் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இப்போராட்டத்திற்கு அரசாங்கத்தின் சாதகமான பதில் வழங்கத் தவறினால் இனிவரும் காலங்களில் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வூடகவியலாளர் சந்திப்பில் ஓய்வுபெற்றோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் பிரதிநிதி கே,சரத்லால், அரசாங்க அச்சுத்திணைக்களத்திலிருந்து ஓய்வுபெற்ற, ஐ, டி சுனில், ஓய்வுபெற்ற ஆசிரியையான கே.டி. சாந்தனி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.