அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சுமார் 6 இலட்சம் பேருடைய சம்பள பிரச்சினையை தீர்க்கும் முறை குறித்து கடிதம் மூலம் அறிவிக்குமாறு அரச நிருவாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஓய்வூதிய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஓய்வூதிய சம்பள பிரச்சினையை தீர்க்கும் முறை குறித்து பயனாளிகள் அறியாதிருப்பதனால் கடிதம் மூலமாக அவர்களை தௌிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும். ஓய்வுபெற்றோரின் சங்கங்களுடன் அண்மையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி தொடக்கம் ஓய்வு பெற்றவர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பது என எதிர்பார்த்திருந்த போதிலும் அது சாத்தியப்படாமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இப்பிரச்சினையை தீர்க்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.