விமான நிலையத்தை சுற்றுலா பயணிகளுக்காக திறக்க முன்மொழிவு

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சுற்றுலா பயணிகளுக்காக விமானநிலையத்தை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி ஜனாதிபதிக்கு முன்மொழிந்துள்ளது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 30 முதல் இதுவரை பாதிக்கப்பட்ட ஒரு நபரும் கூட சமூகத்திலிருந்து பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க சாதனை என்றும் அச்செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை புத்துயிர் பெறுவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதிக்க கொவிட் 19 தடுப்பு பணிக்குழு குழு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (26) கூடியபோதே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டைத் திறக்கும்போது சர்வதேச மற்றும் உள்ளூர் சுகாதார வல்லுநர்கள் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் அவசியத்தை இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

முதல் கட்டமாக சுற்றுலா ஊக்குவிப்பு ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களையும் உணவகங்களையும் உள்ளூர் பாவனைக்காக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435