கடந்த மாத மேலதிக நேர கொடுப்பனவாக 15 கோடி ரூபா

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு கடந்த மாதம் சுமார் 15 கோடிக்கும் மேற்பட்டத் தொகை மேலதிகமாக நேர கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் உடனடியாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர கூட்டுத்தாபன பொது முகாமையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சரின் கையெழுத்துடனான கடிதம் மூலம் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூட்டுத்தாபனத்தில் மேலதிக ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் கடமையின்றி காலம் கழிக்கையில் பெரிய தொகைப் பணம் மேலதிக கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. கூட்டுத்தாபனச் செயற்பாடுகளை முன்னெடுக்க போதுமான எண்ணிக்கை ஊழியர்கள் இருந்த நிலையில் முறையற்ற முகாமைத்துவம் காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய தொகைப் பணம் இல்லாது போயுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தௌிவைப் பெற்றுக்கொள்ளவும் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் குறித்த விடயம் தொடர்பில் இன்று (20) அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் பொதுமுகாமையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435