புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்கள் உடனடியாக தமது கடமையை பொறுப்பேற்கவேண்டும் என்று கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணி உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர்களின் கோரிக்கைக்கேற்ப வௌிமாகாணங்களில் நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கு மீண்டும் மாகாணத்துக்குள்ளேயே நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
வௌிமாகாணங்களில் நியமனம் பெற்ற கிழக்கு மாகாண கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகள் 310 பேருக்கு வௌிமாகாணங்களில் நியமனங்கள் கிடைத்தன. அவர்களில் 178 பேர் வௌி மாகாண நியமனங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனையோர் தமது நியமனங்களை ஏற்றுக்கொள்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிதாக நியமனம் பெற்றவர்களின் கடமைகள் இன்று ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.