வடக்கு சுகாதார பணி உதவியாளர்களுக்கு மீண்டும் நேர்முகத்தேர்வு

சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேரை நியமிப்பதற்காக கடந்த மாதம் இடம்பெற்ற நேர்முகத்தேர்வுகள் அதனுடைய பெறுபேறுகள் அனைத்தையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேநேரம், குறி;த்த வெற்றிடங்களுக்காக நேர்முகத் தேர்வுக்குத் தோற்றிய 1923 பேருக்கும் மீண்டும் நேர்முகத்தேர்வினை நடத்துமாம் ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

சுகாதார பணி உதவியாளர்களின் ஆட்சேர்ப்பின்போது சில தவறுகள் இடம்பெற்றுள்ளதை கண்டறிந்துள்ள ஆளுநர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார் என அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நேர்முகத்தேர்வுக்கு வருகைதருபவர்கள் போலியான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் வருகை தந்து, அவை போலியானவை என்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக தகுந்த சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் எச்சரித்துள்ளார்.

ஒரு மாதத்திற்குள் இந்த நேர்முகத்தேர்வினை நடாத்தி அவர்களை குறித்த வெற்றிடங்களுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணித்துள்ளார்.

இதற்காக 24 குழுக்களை நியமிக்குமாறும், ஒரு குழுவில் 3 அதிகாரிகள் பணியாற்றுவதுடன்ஈ இதற்கு மேலதிகமாக பார்வையாளர்களாக வடமாகாண மக்கள் பிரதிநிதிகளின் பிரதிநிதி ஒருவரும் நேர்முக தேர்வில் கலந்துகொள்பவர்களின் பிரதிநிதி ஒருவரும் கலந்து கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்.

இதன்மூலம் நேர்முகத் தேர்வின்போது வெளிப்படைத்தன்மை காணப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2020 ஜனவரி 1ஆம் திகதி முதல் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் ஆட்சேர்ப்புக்களில்; 6 சதவீதம் மாற்றுத்திறனாளிகள், 5 சதவீதம் பெண் தலைமைத்துவ குடும்பங்களை சார்ந்தவர்கள், 3 சதவீதம் காணாமல் ஆக்கப்பட்டோரின்  குடும்பங்கள்  மற்றும் ஒரு சதவீதம் மாற்றுப் பாலினத்தவருக்காகவும் இடத்தினை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார் என அவரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435