கடமைகளை சரிவர செய்யத் தவறும் அரச ஊழியர்கள் வீடு செல்ல தயாராக இருக்குமாறு அரசாங்கம் அவரச எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுயாதீன ஆணைக்குழுவின் பங்களிப்பு மூலோபாயக் கருத்திட்ட அறிக்கையை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு நேற்று (18) இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அரச அதிகாரிகளின் அசமந்த மற்றும் மந்தச் செயற்பாடுகளை கவனித்தில் கொண்டுள்ளது. சில அரச உத்தியோகத்திர்கள் இவ்வாறு செயற்படுவதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை மேற்கொள்கின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இதனால் பொது மக்களுக்கு அரசாங்கத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் இந்நிலை தொடர்ந்தால் அவ்வாறான அதிகாரிகள் ஜனவரி தொடக்கம் வீட்டில் இருக்க தயாராக இருக்குமாறும் நேற்று (17) எச்சரித்துள்ளார்.