கடலுக்கு செல்லும் மீனவர்கள் கடலில் குப்பைகள் போடுவதை தவிர்ப்பதற்காக புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராய்ச்சி ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடலில் கழிவுகள் சேர்க்கின்றமையினால் பவளப்பாறைகள் உட்பட கடல் வளங்களுக்கு ஏற்படும் அழிவை தவிர்க்கும் வகையிலேயே புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடல்வளத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்லும் மீனவர்கள் கடலுக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களை ஆய்வு செய்வதும் மீண்டும் தரைக்கு திரும்பியதும் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளனவா என்று அறிந்துக்கொள்வதும் மிக அவசியம் என்றும் தெரிவித்தார்.
வேலைத்தளம்