கட்டாய ஓய்வு பெறுவதற்கான வயது 60 – பிரதமர்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாய ஓய்வு பெறுவதற்கு இரண்டு வெவ்வேறு வயது இருப்பதை நியாயப்படுத்த முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (17) நாடாளுமன்றில் ஆற்றிய 2021  ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் தெரிவித்துள்ளார்.

அரச துறைக்கு கட்டாய ஓய்வூதிய வயது 60 ஆண்டுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் அதிக ஆயுட்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பாலினம் அல்லது வேலைவாய்ப்புத் துறையைப் பொருட்படுத்தாமல் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதிய வயதை நீடிப்பதற்கு நான் முன்மொழிகிறேன்.

பெண்களின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் 76.6 ஆண்டுகள் மற்றும் ஆண்களின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் 72 ஆண்டுகள் ஆகும்.

எவ்வாறாயினும்இ 1958 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊழியர் சேமலாப நிதியச் சட்டம், நிதியத்தின் நன்மைகளுக்கு தகுதியான ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயதை பெண்களுக்கு 50 ஆண்டுகள் மற்றும் ஆண்களுக்கு 55 ஆண்டுகள் என நிர்ணயித்துள்ளது.

ஏனென்றால், ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நேரத்தில், பெண்களின் ஆயுட்காலம் 57.5 ஆண்டுகளாகவும்இ ஆண்களின் ஆயுட்காலம் 58.8 ஆண்டுகளாகவும் இருந்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அரச மற்றும் தனியார் துறை செயற்பாடுகள்

எமது நாட்டைப் போன்று ஏனைய அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அனைத்தும் 1977 இற்கு முன்னர் செயற்படுத்தப்பட்ட இறுக்கமான கட்டுப்பாட்டுடன் கூடிய மூடிய பொருளாதாரக் கொள்கையிலிருந்து வெளியேறியதுடன் பூகோள மயப்படுத்தப்பட்ட சந்தையினை அடிப்படையாக் கொண்ட கொள்கைகளை பின்பற்றுகின்றன. அந்நாடுகள் கடந்த சில வருடங்களாக பொருளாதார வேலைச் சட்டகத்திற்குள் தேசிய உற்பத்தித்திறன் கொண்ட பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளன.

வர்த்தக நடவடிக்கைகளில் அரச துறையினைவிட தனியார் துறை முன்னணியில் திகழ்கின்றது. இதற்கு மாற்று வழிமுறையாக அரச தொழில் முயற்சிகளை தனியார் மயப்படுத்த முடியாது. பதிலாக அவசியமான அரச துறை தலையீடுகளுடன் தனியார் துறை போன்று அரச தொழில் முயற்சிகளுக்குத் தேவையான முகாமைத்துவ சுதந்திரத்தினை வழங்குவதன் மூலம் சந்தை போட்டித் தன்மை அதேபோன்று நுகர்வோர் சேமநலன் என்பவற்றினை அதிகரிக்க முடியுமென்பது தெளிவாகும். எனவே, பல்வேறு துறைகளில் அரச தொழில் முயற்சிகளின் வர்த்தக சுயாதீனத்தினை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அரச சுயாதிக்கத்தினை வழங்குவதற்கான ஒழுங்குறுத்துகை திட்டமொன்றினை முன்வைப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். பல்வேறு சட்ட வரையறைகளின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள வேறுபட்ட அரச துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு மத்தியில் இடம்பெற வேண்டிய அரச துறை மூடிய சேவைகளின் மறுசீரமைப்பு, மாற்றங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் சேமநலன் என்பவற்றினை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, அவற்றினது நோக்கங்களை அடைந்து கொள்வதில் வரையறைகளை எதிர்நோக்கியுள்ளது. எனவே, மூடிய சேவைகளிலுள்ள அரச துறை தொழில்முயற்சிகளின் ஊழியர்கள் குறித்த சேவைகளின் நடைமுறைகளைப் பின்பற்றி தமது சேவை தேவைப்பாடுகளுக்கேற்ப நிறுவனங்களில் இணைத்துக் கொள்ளப்படும் வகையில் சட்ட ஏற்பாடொன்றினை அறிமுகப்படுத்துவதற்காக நிதிச் சட்டத்தினை திருத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். தற்பொழுது மூடிய சேவை நிறுவனங்களில் சிக்கியுள்ள ஊழியர்கள் தமது தொழிற்றுறை ஆர்வத்திற்கிணங்க தொழில் புரிவதற்கு அல்லது தாம் வாழ்கின்ற பிரதேசங்களில் தொழிலைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

பல்வேறு காரணங்களினால் இணைந்த பணிகளை முன்னெடுக்கின்ற நிறுவனங்கள் வேறுபட்டிருப்பது அதிக செலவினத்தினை ஏற்படுத்தும் அதேவேளை, இத்துறைகளின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பெருந் தடையாகவும் காணப்படுகின்றது.

சுற்றுலாத் துறைக்காக, சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை போன்ற 5 நிறுவனங்கள் காணப்படும் அதேவேளை, தெங்குக் கைத்தொழில் துறைக்காக தெங்குப் பயிர்ச்செய்கை மற்றும் இணைந்த கைத்தொழில்கள் அபிவிருத்தி அதிகார சபை போன்ற 4 நிறுவனங்கள் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றினை இணைந்த நிறுவனக் கட்டமைப்பொன்றாக உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. உற்பத்தித்திறனை அதிகரிக்கின்ற வகையிலான ஆராய்ச்சிகளுக்காக செலவிடப்படும் வளங்களை முகாமை செய்வதற்கு தேசிய ஆராய்ச்சி பேரவையுடன் இணைந்த வகையில் ஆராய்ச்சி நிறுவகங்களை இயக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான சலுகைகள்

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக சூரிய மின்சக்தியினைப் பெற்றுக்கொள்வதற்கு அரச ஊழியர்களுக்கான விசேட கடன் திட்டமொன்றினைச் செயற்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

அரச ஊழியர்களுக்கு நியமனங்கள் மற்றும் இடமாற்றல்கள் வழங்கும் போது வதிவிடத்தைக் கொண்ட மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவதனை உறுதிப்படுத்தல் வேண்டும்.

நிறைவேற்றுத் தரமல்லாத அரச ஊழியர்கள் அலுவலக நேரத்தின் பின்னர் ஏனைய தொழில்களில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படுவதுடன் வெளிநாட்டு தொழில் வாய்ப்பினை நாடுபவர்களுக்கு இரண்டு வருட கொடுப்பனவுடன் கூடிய விடுமுறை வழங்கப்படும்.

வங்கிகளினால் வழங்கப்பட்ட அரச ஊழியர்களின் வீடமைப்பு மற்றும் ஆதனக் கடன்களுக்காக அறவிடப்படும் வட்டியினை ஆகக் கூடியது 7 சதவீதம் வரை குறைப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இதன் மூலம் அரச ஊழியர்கள் மாதமொன்றுக்கு ரூபா 3,000 முதல் ரூபா 4,700 வரை சேமிக்க முடியும்.

சுய வேலைவாய்ப்புக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்

அரச துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டமொன்று இருக்கின்ற போதிலும், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் சில ஊழியர்கள், ஊழியர் சேமலாப நிதியிலிருந்து மட்டுமே பயனடைகின்றனர்.

மேலும், விவசாயம், மீன்பிடி, சிறு நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் போன்ற உற்பத்தித் துறைகள் மற்றும் சேவைகளில் பணியாற்றும் பெரும்பான்மையினருக்கும் மற்றும் வேலைவாய்ப்பு, ஆடை, சுற்றுலா, பெருந்தோட்டம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் நாட்டிற்கு அந்நிய செலாவணி வருவாயைக் கொண்டு வருபவர்களுக்கும் ஓய்வூதியத் திட்டமோ அல்லது ஊழியர் சேமலாப நிதி பொறிமுறையோ கிடையாது. இந்த ஊழியர்களுக்கு வயதான காலத்தில் நிரந்தர வருமானம் இல்லை. அதனால்தான் அவர்களுக்காக ஒரு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை 2012 இல் முன்மொழிந்தேன். எனவே, 65 வயதின் இறுதி வரை வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  2021  ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435