கட்டாரின் தற்போதைய நிலை மத்திய கிழக்கு நாடுகளுக்கு எச்சரிக்கை மணி

கட்டாரில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய நிலையானது பேச்சுவார்த்தையினூடாக தீர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் பிரச்சினை நீளுமாயின் மத்திய கிழக்கு நாடுகளில் ஸ்தீரமற்ற நிலை ஏற்படும் என்று குவைத் அரசத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குவைதின் 15வது தேசிய அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அரச தலைவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கிறது என்று கூறி சவுதி அரேபியா, பஹ்ரேய்ன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து கட்டாரில் பிரச்சினைகள் வலுக்க ஆரம்பித்தன. தொடர்ந்து பல்வேறு தடைகளை விதித்ததுடன் இராஜதந்திர உறவுகளையும் நிறுத்தி கட்டாரை இந்நாடுகள் தனிமைப்படுத்தின. இந்நிலையிலருந்து மீள்வதற்கு நடுநிலையில் நின்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குவைத் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் இதுவரை வெற்றியளிக்கவில்லை.

இந்நிலையில் கல்ப் வலயமானது எமது வீடு. கல்ப் நாடுகளுக்கிடையில் பிளவுகள் ஏற்படுமாயின் அவ்வீடு நிர்மூலமாகும். அவ்வாறு நடக்க இடமளிக்க மாட்டோம். கல்ப் வலய நாடுகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள். சகோதரர்களுக்கிடையில் பிரிவினைகள் ஏற்படக்கூடாது என்று குவைத் அரச தலைவர் தெரிவித்துள்ளார்.

மூலம்- லங்காதீப (மத்திய கிழக்கு)/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435