கட்டாரில் வேலைக்கான அனுமதியை பெற…

கட்டார் வேலைவாய்ப்பை நாடி செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 7 நாட்களுக்குள் தங்கியிருத்தல் மற்றும் பணிக்கான அனுமதியை தொழில் வழங்குநர் பெற்றுக் கொடுப்பது கட்டாயம் என்று உங்களுக்குத் தெரியுமா?

வேலை மற்றும் தங்குவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்னர் புலம்பெயர் தொழிலாளர் அரசாங்க அனுமதி பெற்ற மருத்துவமனையொன்றில் மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.

கடவுச்சீட்டின் பிரதி, பணிபுரிவதற்காக வழங்கப்பட்ட வீஸாவின் பிரதி, உரிய கட்டணம் என்பவற்றை மருத்துவமனையில் சமர்ப்பித்தே மருத்துவ பரிசோதனையை செய்துக்கொள்ள வேண்டும். மருத்துவ ரீதியாக நீங்கள் பணியாற்ற தகுதியுடையவராக இருப்பின் உங்கள் மருத்துவ அறிக்கை வழங்கப்படும்.

கட்டாரில் நீங்கள் பணியாற்றுவதற்கான அனுமதியை பெறுவதற்கான விண்ணப்பத்தை அந்நாட்டு தொழிலாளர் அமைச்சிடம் பெற்றுக்கொள்ளலாம். தங்குவதற்கான அனுமதியை பெறுவதற்கு ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கலாம். ஒன்று தொடக்கம் மூன்று ஆண்டுகள் வரை தங்குவதற்கான அனுமதியை பெறலாம்.

வேலைத்தளம்/ வெல்கம் கட்டார்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435