கட்டாரை விட்டு வெளியே புலம்பெயர் தொழிலாளருக்கு அனுமதி அவசியம்

கட்டாரில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்களின் ஸ்பொஸ்சர்ஷிப்பினூடாக தங்கியிருப்போர் நாட்டை விட்டு வெளியேறுவதானால் அதற்கான அனுமதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஸ்பொன்சர் செய்வோரின் மனைவி, பிள்ளைகளுக்கு இப்புதிய நடைமுறை செல்லுபடியாகாது.

நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனுமதியை ஸ்பொன்சர் செய்பவரே பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான விண்ணப்பங்களை அனுமதி பெற்றவர்கள் இணையதளத்தினூடாக MOI தானியக்க இயந்திரத்தினூடாக அல்லது எல்லை கடவுச்சீட்டு மற்றும் புலம்பெயர் விவகார பணிப்பாளர் நாயகம் அலுவலகத்தினூடாக சமர்ப்பித்து அனுமதியை பெறலாம்.

இணையளத்தில் விண்ணப்பிக்கும் முறை

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோக பூர்வ இணையதளத்தில் உள்ள “Exit & Entry Permits” என் பக்கத்துக்கு சென்று, தேவையான தகவல்களை பூர்த்தி செய்க.

என்ன வகையான வெளிச்செல்லல் என்பதை தெரிவு செய்க.

தொடர்க “Continue” அறிவுறுத்தலை கிளிக் செய்க.

மேலதிக தகவல்களை வழங்குக.

இதற்காக Metrash2.சேவையினூடாகவும் விண்ணப்பிக்கலாம். முப்பது நாட்களுக்கு அதிகமான நாட்கள் நாட்டில் தங்கியிருக்கும் 18 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கே இவ்வனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒரு தடவை வெளியேறுவதற்கான அனுமதியை பெறுவதற்கு 10 கட்டார் ரியால்களும் பல தடவைகள் வெளியேறுவதற்கான அனுமதியை பெறுவதற்கு 500 கட்டார் ரியால்களும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஒன்லைன்னில் விண்ணப்பிக்க

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435