கட்டார் அரசின் உதவியுடன் கிழக்கு பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு

கிழக்கு வேலையில்லா பட்டதாரிகளுக்கு கட்டார் அரசின் உதவியுடன் தொழில்வாய்ப்புக்களை பெற்றுகொடுப்பதற்கு மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கிழக்கு பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு பிரதமர் ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம் தலைமையில் அனைத்து நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கட்டார் அரசின் உதவியுடன் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கு அந்நாட்டு அதிகாரிளுடன்  பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அரசின் அனுமதி கிடைத்தவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.

4103 பட்டதாரிகளின் வெற்றிடங்களையும் சில பாடசாலைகளில் காணப்படும் அதிபர் வெற்றிடங்களையும் நிரப்புமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளோம். கடந்த வாரம் அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கவை சந்தித்த போது 1200 வடக்கு கிழக்கு பட்டதாரிகளுக்கு சமுர்த்தியில் தொழில்வாய்ப்பினை வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதில் 600 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து உள்வாங்கப்படவுள்ளனர்.

கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு தொழிலின்மை பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு விரைவில் படுவான்கரையில் கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

நன்றி – தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435