கட்டார் புதிய சட்டமும் புலம்பெயர் தொழிலாளரும்

கட்டாரில் இன்று (13) தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் புதிய தொழிலாளர் சட்டம் தொடர்பில் அந்நாட்டில் வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமன்றி தொழில் வழங்குநர்களும் அவதானத்துடன் எதிர்பார்த்துள்ளனர் என்று அந்நாட்டு செய்தித்தளமான கட்டார் டே தகவல் வௌியிட்டுள்ளது.

இச்சட்ட மாற்றத்துடன் கட்டார் தொழிற்றுறையில் பாரிய மாற்றம் ஒன்று ஏற்படவுள்ளதாகவும், அதனூடாக தொழிலாளர் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் பல பூர்த்தி செய்யப்படும் என்றும் கட்டார் அரசாங்கம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது. புதிய சட்டம் தொடர்பில் புலம் பெயர் தொழிலாளர்களாகிய நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையிலான தொழில்- கட்டாரில் தொழில் செய்யும் அனைத்து புலம் பெயர் தொழிலாளர்களும் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றுவர். ஒப்பந்த காலம் நிறைவுறுவதற்கு முன்னர் பணிநீக்கம் செய்யதால் அல்லது பணியாளரின் விருப்பதுடன் விழகினால் குறிந்த ஒப்பந்த காலம் நிறைவுறும் வரை மீண்டும் கட்டாருக்கு பணிநிமித்தம் செல்ல முடியாது.

உதாரணமாக சொல்வதாயின் 4 வருட ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஒருவர் மூன்று வருடத்தில் சேவையை விட்டு சென்றால் மிகுதி ஒரு வருடம் பூர்த்தியாகும் வரையில் தொழில் நிமித்தம் கட்டார் செல்ல முடியாது. புதிய சட்டத்திற்கமைய ஒப்பந்த காலம் பூர்த்தியடைந்த மறுநாள் தொடக்கம் புலம்பெயர் தொழிலாளர் வேறு தொழில் வழங்குனரிடம் சேர்ந்து பணியாற்ற முடியும். அதற்கு எந்த தடையும் அழுத்தங்களுமின்றி மீண்டும் கட்டாருக்கு சென்று பணியாற்றலாம். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் தொழில் வழங்கும் நிறுவனங்களுடன் ஊழியர்கள் புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட தேவையில்லை.

பழைய ஒப்பந்தமே நடைமுறையில் இருக்கும். புலம்பெயர் தொழிலாளர் புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பட்சத்தில் சேவைக்காலம் கணக்கெடுக்கப்படும். அனைத்து ஒப்பந்தங்களும் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து கணிப்பிடப்படும். இதனூடாக முன்பு பணியாற்றிய காலம் கணக்கில் கொள்ளப்படாது என்று அர்த்தம் அல்ல.

உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒப்பந்தமானது சேவை வழங்குநருக்கு ஏற்றாற் போல் தயாரித்திருக்கும் பட்சத்தில் பணியாளர் விரும்பினால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடலாம். விருப்பமின்றேல் மீண்டும் சொந்த நாட்டுக்கு மீண்டும் திருப்பி அனுப்பலாம்.

கட்டார் தொழில், சமூக விவகார மற்றும் அபிவிருத்தி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைய ஒரு புலம்பெயர் தொழிலாளருக்கான சேவைக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. புலம் பெயர் தொழிலாளர் ஒருவருக்கு தண்டனை வழங்குவதை நோக்காக கொண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டால் மற்றும் அது தொடர்பில் நீதிமன்றில் வழங்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டால் 4 வருடங்களுக்கு கட்டார் நாட்டுக்கு வரும் வாய்ப்பை குறித்த நபர் இழப்பார் என்று புதிய சட்டத்தின் 26 சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435