பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உங்களுக்கும் வாய்ப்பு

நாட்டில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனத்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோளரவின் ஆலோசனைக்கமைய நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கை பத்தரமுல்லையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமைக் காரியாலத்தில் ஆரம்பமாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க நீங்களும் விரும்பினால் தண்ணீர் போத்தல்கள், உலர் உணவுப் பொருட்கள், மருந்து வகை, சுகாதார துவாய்கள், உடைகள் உட்பட அத்தியவசிய பொருட்களை இம்மத்திய நிலையத்தில் கையளிக்க முடியும்.

இம்மனிதாபிமான செயற்பாட்டில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையரும் இணைந்துகொள்ளலாம்.

தொடர்புகளுக்கு –

0113049486 / 0112864150, 0711423 223 – சஞ்ஜீவ

0710 873110- நளீன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435