கட்டிடத் தொழிலாளர்களுக்கும் விரைவில் ஊழியர் சேமலாப நிதியம்?

கட்டிடத் தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியத்தில் அங்கத்துவம் வழங்கி அதன் நன்மைகளை பெற்றுக்கொடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை அமைத்துள்ளார்.

இக்குழுவில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் ஆலோசகர் சரித் ரத்வத்த, தொழில் அமைச்சின் செயலாளர், ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர்.

அன்றாட கூலி வேலையாக பார்க்கப்படும் கட்டிடத் தொழில் பணியாற்றும் ஊழியர்கள் அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தை செலவிட்டுவிட்டு பிற்காலத்தில் வாழ்வதற்கே வழியின்றி துன்பப்படுகின்றனர். இதனை கருத்திற்கொண்டு அத்தொழிலாளர்களுடைய முதுமைக்காலத்தை கருத்திற்கொண்டு இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ்வாறான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலம் உள்ளதை போன்றே இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான முதுமைக்காலத்தை கருத்திற்கொண்டு செயற்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய அலோசனைகள் அடங்கிய அறிக்கையை விரைவில் தயாரித்து கையளிப்பதற்காக இக்குழு அமைக்கப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435