கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் தமது சொந்த வாகனங்களை பயன்படுத்தாது தொழிற்சாலைகள் வழங்கும் வாகனங்களிலேயே பணிக்கு செல்ல வேண்டும் என கட்டுநாயக்க பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அகில ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் தமது சேவையிட அடையாள அட்டையை ஊரடங்கு நேர அனுமதி அட்டை போன்று பயன்படுத்தி பணிக்கு செல்வது போன்று வேறு பிரதேசங்களுக்கு சென்றுகொண்டிருந்தபோது அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அதனால் கொரோனா வைரஸ் நாடு பூராவும் பரவும் அபாயம் ஏற்பட்டுளளமையினால் பொலிஸ் உயரதிகாரிகள் இத்தீர்மானத்தை எடுத்துள்ளனர் என கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய இன்று (19) தொடக்கம் தனியார் வாகனங்களில் வருகைத் தரும் அனைத்து ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர். மேலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சூழவுள்ள தங்குமிடங்களில் உள்ள ஊழியர்கள் தேவையேற்படின் நடந்து தொழிற்சாலைக்கு வர முடியும் என்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.