கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பல இலங்கையர்களுக்கு உரிய வேதனம் இல்லை

டோஹா கட்டாரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பல இலங்கையர்கள், உரிய வேதனம் கிடைக்கப்பெறாத நிலையில் இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தியாவின் த ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

டோஹாவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்ற சுமார் 1200 பேருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வேதனம் வழங்கப்பட்டிருக்கவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 550 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தங்களது இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஹிந்து தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435