கணவன் இறந்த செய்தியையும் மறைத்த தொழில் தருனர்: சவுதி சென்ற பெண்ணின் சோகம்

கணவன் இறந்த செய்தியையும் மறைத்த தொழில் தருனர்: சவுதி சென்ற பெண்ணின் சோகம்தனது கணவன் இறந்த செய்தியைக்கூட தனது தொழில் தருனர் தனக்கு கூறாமல் மறைத்து, தன்னை தொழிலில் அமர்த்தியதாகவும், துன்புறுத்தியதாகவும் சவுதியிலிருந்து நாடு திரும்பிய நுவரெலியா – மஸ்கெலியா – கிலன்டில் தோட்டத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் தெரிவித்துள்ளார்.

2014.08.20ஆம் திகதி சவுதிக்கு சென்ற இவர் இரண்டு வருடங்களின் பின்னர் நாடு திரும்பியுள்ளார்.

தான் சவுதியில் தங்கியிருந்த காலப்பகுதியில் தனது குடும்பத்தாருடன் உரையாடுவதற்கு தனது தொழில் தருனர் வாய்ப்பளிக்கவில்லை என்றும், தனது பிள்ளைகளுக்கு பணம் அனுப்ப முடியாத நிலையில் இருந்ததாகவும் இந்தப் பெண் கூறுகிறார்.

தனது தொழில் தருனரால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், இலங்கையில் உள்ள சிலவரின் முயற்சியால்தான், தான் மீண்டும் இலங்கைக்கு திரும்பியதாகவும் கிலன்டில் தோட்டத்தைச் சேர்ந்த பெண் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435