கண்டி மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான வீடமைப்புத் திட்டம்

கண்டி மாவட்டத்தில் உள்ள அரச பணியாளர்களுக்கான உத்தியோகப்பூர்வ இல்லங்களை அமைக்கும் திட்டம் கடந்த 29ம் திகதி காலை 10 மணிக்கு அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையில் இடம்பெற்றது.

அரச பணியாளர்களுக்கு சலுகை அடிப்படையில் வீடுகள் பெற்றுகொடுக்கும் திட்டத்தின் கீழ் இவ்வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

குறித்த திட்டத்தின் கீழ் 546 வீடுகளைக் கொண்டு அடுக்கு மாடி வீடுகள் அமைக்கப்படவுள்ளன. மூன்று மற்றும் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்டதாக இரு வகை வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன், அவ்வீடுகளை அரச உத்தியோகத்தர்கள் சொந்தமாக கொள்வனவு செய்யவும் முடியும். அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன் அடிப்படையிலும் இவ்வீடுகளை கொள்வனவு செய்யலாம். 2020 இவ்வீடமைப்புத் திட்டம் பூர்த்தி செய்யப்படும்.

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய வீடமைப்புத் திட்டங்களை எதிர்காலத்தில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கண்டியில் நிர்மாணிக்கப்படுவது மூன்றாவது வீடமைப்புத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435