புத்தாண்டை கறுப்பு ஆடை அணிந்து கொண்டாடியுள்ளனர் அம்பாறை மாவட்ட பட்டதாரிகள்.
புதிய ஆடை வாங்கி உடுத்தி புது வருடத்தை கொண்டாட வசதியில்லாத காரணத்தினால் பெற்றோரின் பணத்தை கொண்டு கறுப்பு ஆடை அணிந்து தமது கவலையை அரசாங்கத்துக்கு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு செய்வதாக அப்பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமக்கு அரச நிறுவனங்களில் தொழில்வாய்ப்பினை வழங்குமாறு வடக்கு கிழக்கு பட்டதாரிகள் தொடர்ச்சியாக சத்தியாக்கிரக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் புதுவருட தினமான இன்று 47வது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.