கற்ற மலையக இளைஞர் யுவதிகளுக்கு ஆசிரியராக வாய்ப்பு

மலையகத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரித நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உறுதியளித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர்,நேற்று (19) அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

மலையகத்தில் 2 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படியும், தற்போது 10 ஆயிரம் ரூபா மாத்திரம் வேதனம் வழங்கப்படுகின்ற ஆசிரியர் உதவியலாளர்களுக்கான தரமுயர்வையும் வழங்கும்படியும் அவர்கள் கல்வி அமைச்சரிடம் கோரியுள்ளனர்.

இது சம்பந்தமாக துரிதமாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதன்போது உறுதியளித்துள்ளார் என அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435