50 ரூபா மேலதிக கொடுப்பனவுக்கு தேயிலை வருமானத்தில் வெறும் 0.47%மே தேவை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு மொத்த தேயிலை உற்பத்தி வருமானத்தில் 0.47 சதவீதமாகும் அவசியமாகும் என்றும் இந்த கொடுப்பனவிற்கான கடன்தொகையை வழங்குவதால் தேயிலை சபைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் இல்ஙகை தேயிலை சபை அறிவித்துள்ளது.

நாட்டின் தேயிலை உற்பத்தி மூலம் மொத்தமாக வருடாந்தம் 1500 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைக்கின்றன. அவற்றில் 7 மில்லியன் டொலர்கள் மாத்திரமே இந்த கடன் தொகையாக வழங்கப்படவுள்ளதாக தேயிலை சபையின் தலைவர் லூசில் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் இவ்வாறான கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்விறிருப்பினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்காக, பெருந்தோட்ட நிறவனங்களுக்கு கடன்வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்று லூசில் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலதிமாக கொடுப்பனவு ஒன்றை வழங்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவர்களுக்கு நாளாந்தம் 50 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கும், அதற்காக தேயிலை சபையில் இருந்து 1.2 பில்லியன் ரூபாய்களை கடனாக நிறுவனங்களுக்கு வழஙகப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த தொகையை தேயிலை சபையின் விரிவாக்கல் நிதியில் இருந்து வழங்குவதற்கான முதற்கட்ட இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் லு{ஸில் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 1.2 பில்லியன் ரூபாய்களை நிறுவனங்களுக்கு கடனாக வழங்கவும், இதனை 2 வருடங்களில் மீளப் பெறவும், 4 சதவீதம் தொடக்கம் 8 சதவீதம் வரையில் அந்த கடனுக்கு வட்டியை அறவிடம் இதுவரையில் கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

எனினும் இந்த விடயத்தில் இறுதி உடன்படிக்கை ஏற்படுத்தப்படவில்லை.

அரசாங்கம் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டதன் பின்னர், இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படும் என்றும் இலங்கை தேயிலை சபையின் தலைவர் லு{ஸில் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435