பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள பிரச்சினை குறித்து விரைவில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
தொடர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழகங்கள் ஒரு வார காலமாக மூடியிருப்பது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என நேற்று பாராளுமன்ற கேள்வி நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஏற்கனவே குழுவொன்றினால் அனுமதிக்கப்பட்ட சம்பளமே தற்போது பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதேவேளை, கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது. எனவே கல்விசாரா ஊழியர்களுடன் உயர்கல்வியமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்கள் கலந்துரையாடி விரைவில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே பாராளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம் – தினகரன்