கல்விசார் ஊழியர்களின் சிக்கன கடனுதவி சங்க கவனத்திற்கு

கல்விசார் ஊழியர்களின் சிக்கன கடனுதவி சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் தலைவர் செயலாளர் நாயகம் நாதன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சேமிப்பில் உள்ள பணத்தை எடுக்க சிக்கன கடனுதவி சங்கத்தின் நுவரெலியா கிளைக்கு சென்ற சுகயீனமுற்ற அதிபர் ஒருவரை ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். ஒரு அரசாங்க உத்தியோகத்தரை அவமானப்படுத்துவதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? இவ்வாறான பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சம்பவம் தொடர்பில் குறித்த அதிபர் எம்மிடம் முறைப்பாடு செய்தார். குறித்த விடயம் தொடர்பில் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட உதவி முகாமையாளருக்கும் தலைமை காரியாலய கணக்காளருக்கும் முறைப்பாடு செய்துள்ளோம். சுமார் 80 வருடங்களாக சிக்கன கடனுதவிச் சங்கத்தினூடாக பல்வேறு சேவைகளை ஆசிரியர்கள் பெற்று வருகின்றனர். இந்நிலையில் சில ஊழியர்கள் நடந்துகொள்ளும் விதம் அதன் மரியாதைக்கு பங்கம் விளைவிக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

பல இலட்சக்கணக்கான ஆசிரியர் அதிபர்கள் இச்சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.  சமூகத்தில் மரியாதைக்குரிய அந்தஸ்த்துடன் சேவை வழங்கி வரும் அவர்களுடைய சந்தாப்பணத்தில் இயங்கும் சங்கம் அவர்களை மரியாதையுடன் நடத்தவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435