பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பின் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிப்படைவதுடன், நாட்டின் எதிர்காலத்துக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டு அவர், பல்;கலைக்;கழக கல்விசாரா ஊழியர்கள் அரச சேவைக்குள் உள்வாங்கப்படவில்லை. அதனால், அவர்களுக்கு அரச பணியாளர்களுக்கான சிறப்புரிமைகள் கிடைப்பதில்லை.
2016 ஓகஸ்ட் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர். அப்போது உயர்கல்வி இராஜாங்க அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய அந்தப் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அவர்களுக்கான கொடுப்பனவை 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்க இணக்கம் வெளியிடப்பட்டது. இதற்காக நிதி அமைச்சின் அனுமதியில் 360 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டது.
அதற்கு மேலதிகமாக 100 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ளல், அடுத்துவரும் 5 ஆண்டுகளில் பொது கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையில், பல்கலைக்கழக ஊழியர்கள் தொடர்பில் நிதி அமைச்சுடன் இணைந்து செயற்படல் எதிர்காலத்தில் பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் வேதன அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமாயின், அனைத்து தரப்பினருடன் இணைந்து கலந்துரையாடி அது குறித்து தீர்மானம் மேற்கொள்ளல் உள்ளிட்ட 7 விடயங்கள் குறித்த தொழிற்சங்கத்துடன் அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியது.
இது தொடர்பான இணக்கப்பாட்டில் உயர் கல்வி அமைச்சின் செயலாளரும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும் கையொப்பமிட்டனர்.
இந்த இணக்கப்பாடுகள் பூர்த்திசெய்யப்படாத காரணத்தால்தான் அவர்கள் தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களைப்போல, கல்விசாரா ஊழியர்களும் தொடர்ச்சியாக பணியாற்றினால்தான், பல்கலைக்கழக கல்விக் கட்டமைப்பை முன்கொண்டு செல்ல முடியும்.
இல்லாவிட்டால், கல்வித்துறைக்கும், பொருளாதாரத்துக்கும், எதிர்காலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தப் பணிப்புறக்கணிப்பின் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் யெற்பாடுகள் தொடர்ந்தும் பாதிக்கப்படும். எனவே, இந்த வியடத்தில் அதிக கவனம் செலுத்தி தீர்வுகாண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.