கல்விச்சேவை ஆட்சேர்ப்பு குறித்து கல்வி அமைச்சரின் அறிவித்தல்

கல்விச் சேவை அதிகாரிகள், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோரை சேவையில் உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்கும் தேசிய நிகழ்வு, கிரிவுல்ல கனேகொட ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

ஆதில் உரையாற்றியபோதே குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் வெளியிட்டார்.

4000 அதிபர்கள் சேவையில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கல்விச் சேவை அதிகாரிகள், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோரை சேவையில் உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 194 பாடசாலைகளில், 9 ஆயிரத்து 193 பாடசாலைகளில் ஆரம்பப்பிரிவுகள் இயங்குகின்றன.

இந்த நிலையில், வருடாந்தம் 3 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் முதலாம் தரத்திற்காக பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுகின்றனர்.

இதற்கமைய, கல்விச்சேவையின் தேவைக்கேற்ப ஆட்சேர்ப்புகள் இடம்பெறும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435