கல்வித் துறையில் அரசியல் பழிவாங்கல்: நியமனம், பதவி உயர்வு இடைநிறுத்தம்

அரசியல் ரீதியான பழிவாங்கல்களை அடிப்படையாகக் கொண்ட, கல்வி நிர்வாக, அதிபர் – ஆசிரியர் சேவை நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளை வழங்குவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியின் ஊடாக மேற்கொண்ட கலந்துரையாடலையடுத்து, ஜனாதிபதி குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேற்படி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டுள்ள தொழிற்சங்க தலைவர்கள் பலருடன் இன்று (25) ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தும் இந்தத் தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளார்.

அதற்கமைய பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன,

தற்போது திட்டமிட்டுள்ள, நியமனங்கள், பதவி உயர்வுகளை வழங்குவதை உடனடியாக நடைமுறைக்குட்படும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தல்.

மேறபடி நியமனங்கள் தொடர்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளோரின் கடமைகள், சுய விபர கோப்புகளை ஆராய்வதற்கும், அதற்கமைய அவர் அரசியல் ரீதியாக பழிவாங்கல்களுக்குட்பட்டுள்ளாரா என்பதை மீள் பரிசீலனை செய்து, பக்கச்சார்பற்ற முன்மொழிவுகளை வழங்குவதற்காக, இலங்கை நிர்வாக சேவை, கல்வி நிர்வாக சேவை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்தலும், அக்குழுவின் முன்மொழிவுகளை ஒரு மாதத்திற்குள் பெற்றுக்கொள்ளுதலும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படும் மேற்படி குழுவின் முன்மொழிகளுக்கான மேலதிக அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக அரச சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி அதன் பரிந்துரையை பெற்றுக்கொள்ளல்.

நியமிக்கப்படும் குழு, அதன் ஆலோசனையை முன்வைக்கும் பொருட்டு, உரிய தொழிற்சங்கத்திற்கும் வாய்ப்பு வழங்குதல்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள, செயற்பாடுகளின் பின்னர், அரசியல் பழிவாங்கல் அடிப்படையிலான நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளை வழங்குவதில், யாதேனுமொருவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால், அதனை நெறிப்படுத்துவதற்கும் இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435