வட மாகாண அமைச்சு, திணைக்கள வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமனம்?

வடமாகாண பட்டதாரிகளுக்கு மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமனம் செய்யும்படி மாகணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை கற்று வெளியேறிய வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்றுடன் ஒன்பதாவது நாளாகவும் தீர்வின்றித் தொடர்கின்றது.

இந்த நிலையில், வடமாகாண நேற்று இடம்பெற்ற விசேட அமர்வின்போதே அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்த ஆலோசனையை முன்வைத்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்திவரும் பட்டதாரிகள் தம்மை சந்தித்தாக அவைத் தலைவர் கூறியுள்ளார்.

வடமாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்கள் பட்டதாரிகளை கொண்டு நிரப்பபடும் என இதன்போது பட்டதாரிகளிடம் தாம் உறுதியளித்ததாக அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, மாகாண சபை அமர்வு முடிவடைந்ததையடுத்து, குறித்த நியமனங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அவை தலைவர் சி.வி. கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435