அதிபர் மற்றும் ஆசிரியர் சம்பள பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெருமவிற்கும் ஒன்றிணைந்த அதிபர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் ரனுக்கின் சம்பள ஆணைக்குழு முன்மொழிவுக்கமைய, அரச சேவையில் அரச ஊழியர் தொகை மதிப்பீட்டு ஆணைக்குழுவின் முன்மொழிவுக்கமைய செயற்படுத்தப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவ்வாணைக்குழுவின் முன்மொழிவுக்கமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறு இருப்பினும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கான முன்மொழிவொன்றை முன்னாள் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சரவைக்கு 2019 ஒக்டோபர் மாதம் 15ம் திகதி சமர்ப்பித்திருந்தார். அதில் குறித்த ஆணைக்குழுவின் முன்மொழிவுக்கு ஏற்ப செயற்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.