கல்வி அமைச்சில் தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றவர்களுக்கு எதிராக விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் யோசனைக்கு அமைய இந்த விசேட சுற்றிவளைப்பு செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கல்வி அமைச்சிற்கு வருகை தருகின்ற பொதுமக்களிடம் தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி மோசடிகளில் ஈடுபடுவது குறித்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றின் அடிப்படையில் இந்த விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் உதவிகளை பெறுமாறு கல்வி அமைச்சரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.