கல்வி நிருவாக சேவை – நேர்முகத்தேர்வு 23ம் திகதி

கல்வி நிருவாக முதலாம் வகுப்பிற்கு பதவியுயர்வு வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் 23ம் திகதி கல்வியமைச்சில் நடைபெறவுள்ளது.

கல்வி நிருவாக சேவையின் இரண்டாம் தரம் சேவை மூப்பு பட்டியலின் அடிப்படையில் 01.01.2013, 01.06.2013, 01.01.2014, 01.06.2014ம் திகதிகளில் இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் வகுப்பிற்கு காணப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்நேர்முகத்தேர்வு நடத்தப்படுகிறது.

இலங்கை கல்வி நிருவாக சேவையின் முன்னைய சேவை பிரமாணக்குறிப்பில் காணப்படும் இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் வகுப்பிற்கு பதவி உயர்த்தப்படுவதற்கான தகைமைகளை அடிப்படையாக கொண்டே இந்நேர்முகத் தேர்வு நடத்தப்படுவதாக கல்வியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அனுஷ படவெல கமகே தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435