இலங்கை கல்வி நிர்வாக சேவையின் கீழ் மூன்றாம் தரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சை இம்மாதம் 26ம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 9ம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.
குறித்த பரீட்சைக்கு நாடு முழுவதிலும் இருந்து 852 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனினும் நேர்முகப்பரீட்சையினூடாக 512 பேர் மட்டுமே தெரிவு செய்யப்படுவர்.
திறந்த போட்டிப்பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 198 பேருக்கான நியமனங்கள் எதிர்வரும் 17ம் திகதி வழங்கப்படவுள்ள நிலையில், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மீமே தலைமைத்துவ பயிற்சி நிலையத்தில் ஒரு வருட பயிற்சியின் பின்னர் கல்வியமைச்சுடன் இணைக்கப்படுவர். அதன் பின்னர் அமைச்சினூடாக மாகாண கல்வியமைச்சுகளுக்கு கடமைக்காக அனுப்பி வைக்கப்படுவர்.
இது தவிர சேவை மூப்பு மற்றும் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதியில் நடைபெறும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளதாக கல்வி நிர்வாகச்சேவை சங்க செயலாளர் ஏ.எல்.எம். முக்தார் தெரிவித்துள்ளார்.