கல்வி நிர்வாக சேவை- கிழக்கில் 168 வெற்றிடங்கள்

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் கிழக்கு மாகாணத்தில் 168 பேருக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஏ.எம் டப்ளியு திஸாநாயக்க அரச சேவை ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் கீழுள்ள, மாகாண கல்வித் திணைக்களம், வலயக் கல்வி அலுவலகங்கள் என்பவற்றில் இவ்வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

வலயக் கல்விப் பணிப்பாளர், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர், பிரதி வலயக் கல்விப்பணிப்பாளர், உதவிக் கல்விப்பணிப்பாளர் ஆகிய பதவிகளில் இவ்வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

மேலும், புதிய நியமனங்கள் வழங்கும் போது கிழக்கு மாகாணத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரியுள்ள செயலாளர், கிழக்கு மாகாணத்தில் முதலாம் தர பதவியான கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கு 21 பேர் தேவையாக உள்ள போதிலும் ஐவர் மட்டுமே உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாம் வகுப்புப் பதவியான பிரதி வலயக் கல்வி பணிப்பாளர் பதவிக்கு 68 பேர் தேவையாக உள்ளபோதிலும் 15 பேர் மாத்திரமே சேவையாற்றுகின்றனர் என்றும் மூன்றாம் வகுப்பு பதவியான பாடசாலை உதவிக் கல்விப்பணிப்பாளர் பதவிகளுக்கு 136 பேர் தேவையாக உள்ளபோதிலும் 36 பேர் மட்டுமே சேவையில் உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435