சம்பள பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்படாதமைக்க எதிர்ப்பு தெரிவித்து விசேட தேவையுடைய இராணுவத்தினர் கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக காலிமுகத்திடல் வீதி லோட்டஸ் சுற்றுவட்டத்தில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
யுத்தத்தின் போது உடல் அவயவங்களை இழந்த விசேட தேவையுடைய இராணுவத்தினரும் உயிரிழந்த இராணுவத்தினரின் உறவினர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.