கல்வி நிர்வாக சேவையில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக இவ்வருடம் தொடக்கம் ஒவ்வொரு வருடமும் போட்டிப்பரீட்சை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வி நிர்வாக சேவையில் நிலவிய ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கடந்த வருடம் திறந்த போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 198 பேர் பல்வேறு வெற்றிடங்களுக்கு உள்வாங்கப்பட்டனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் இருந்த கல்வி நிர்வாக சேவைக்கு புதிதாக இணைக்கப்பட்டவர்கள் பயிற்சியின் பின்னர் தமது கடமைகளை ஆரம்பிக்கும் நிலை ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தில் தகமையற்றவர்கள் அரசியல் செல்வாக்கினூடாக குறித்த பதவிகளில் இணைக்கப்பட்டனர். எனினும் இம்முறை அவ்வாறின்றி திறந்த போட்டிப் பரீட்சையின் ஊடாக பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று கல்வியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கல்வி நிர்வாக சேவை போட்டிப்பரீட்சையினூடாக தெரிவு செய்யப்படட 198 பேருக்கு நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மூலம் – மவ்பிம
வேலைத்தளம்