கண்டி – மடுல்கல மேற்பிரிவு, மடுல்கலை கீழ்பிரிவு, உனனகலை மேற்பிரிவு, உனனகலை கீழ்பிரிவு ரிச்லேண்ட் மற்றும் கிரிண்லேண்ட ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 800க்கும் அதிகமான தோட்ட தொழிலாளர்கள் இன்று (29) ஒரு நாள் அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபட்;;டனர்.
தாம் பணியாற்றும் தேயிலைத் தோட்டங்கள் பெருமளவில் காடாகி இருப்பதாவும், அதனால் தாம் பெரும் பாதிப்பை hகஎதிர்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேயிலைத் தோட்டங்கள் காடாகி உரிய பராமரிப்பின்மையின் காரணமாக, தாங்கள் தொடர்ந்தும் குளவிக் கொட்டுக்கு இலக்காவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அட்டை, பூச்சிகள், பாம்புகள், பன்றி முதலானவற்றின் அச்சுறுத்தல்களும் அதிகரித்துள்ளதாகவும் தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேநேரம், சிறுத்தைகளின் அச்சமும் உள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தோட்ட நிர்வாகம், தோட்டத்தை முறையாக பராமரிக்காததன் காரணமாகவே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில்;, தமது பிரச்சினைகளைத் தெரிவித்து, தோட்ட நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றைக் கையளித்ததாவும், குறித்த பிரச்சினைக்கு 14 நாட்களுக்குள் தீர்வைப் பெற்றுத்தர தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தோட்டங்கள் காடாகிவரும் பிரச்சினைக்கு 14 நாட்களுக்குள் தீர்வைப் பெற்றுக்கொடுக்காவிட்டால், தொடர் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.