காணாமல்போன உபதலைவர் கண்டுபிடிக்கப்பட்டார்

காணாமல்போனதாக கூறப்பட்ட ஸ்ரீ லங்கா டெலிக்கொம் நிறுவனத்தின் மனித வள (மேன்பவர்) ஊழியர்கள் சங்கத்தின் உப தலைவர் எம்.எஸ். மங்கள கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

களுத்துறை ஹிங்கிரிய பகுதியில் வைத்தே இவர் இன்று அதிகாலை (01) கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேன் ஒன்றில் தன்னைக் கடத்திச் சென்று ஹிங்கிரிய பகுதியில் இறக்கி விட்டுச் சென்றதாக மேன்பவர் ஊழியர்கள் சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.

கண்டுபிடிக்ப்பட்ட அவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது கணவரைக் காணவில்லை என ஸ்ரீ லங்கா டெலிக்கொம் நிறுவனத்தின் மனித வள (மேன்பவர்) ஊழியர்கள் சங்கத்தின் உப தலைவர் எம்.எஸ். மங்களவின் மனைவி பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் அண்மையில் முறைப்பாடொன்றினை அளித்துள்ளார்.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கோட்டையில் உள்ள டெலிகொம் நிறுவனத்துக்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டவர் கடந்த சனிக்கிழமை (28) நள்ளிரவில் வீட்டுக்கு வருவதாக அறிவித்துவிட்டு அங்கிருந்து சென்றதாகவும், ஆனால், அவர் வீடு வந்து சேரவில்லை எனவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்ப்ட்டுள்ளது.

இதேவேளை, தமது சங்கத்தின் உப தலைவர் பன்னிப்பிடியவிலுள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே, காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அனைத்து இலங்கை தொலைத் தொடர்பு சேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிமந்த விஜேசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் டெலிக்கொம் நிறுவனத்தின் மனித வள (மேன்பவர்) ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435