இன அடிப்படையிலான கல்வி நிறுவனங்களில் நாட்டில் உதயமாவதை தடுப்பது அதிகாரிகளின் பிரதான கடப்பாடு ஆகும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தனியால் கல்வி நிலையம் தொடர்பில் கருத்து வௌியிட்ட, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே, குறித்த கல்வி நிலையம் குறித்து கிடைக்கும் தகவல்கள் நேர்மறையானவையாக காணப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
தகவல் அறியும் உரியும் சட்டத்தின் கீழ் குறித்த நிறுவனம் குறித்த விபரங்களை கேட்டுள்ளதாகவும் விபரங்கள் கிடைத்தவுடன் இந்நிறுவனத்தை ரத்து செய்வதா இல்லையா அல்லது அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதா என்பது குறித்து போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டுக்கு பொருத்தமில்லாத கல்விநிறுவனங்களை சைட்டத்தை தோற்கடித்தது போன்ற இதனையும் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.