அரச பாடசாலைகளில் மேலும் 73 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வியமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது என்று கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.டி.எம். நிஸாம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, தமிழ் மொழி மூலம் 88 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களையும் சிங்கள மொழி மூலம் 128 பயிற்றுவிப்பாளர்களையும் நியமிக்க அனுமதி வழங்கி மத்திய அமைச்சு கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் கிழக்கில் தமிழ் மொழி மூல பாடசாலைகளே அதிகம் உள்ளமையினால் தமிழ் மொழி மூல பயிற்றுவிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மாகாண கல்விப்பணிப்பாளர் எழுத்துமூலம் கோரியதையடுத்தே இவ்வனுமதி கிடைத்துள்ளது.
அதற்கமைய, மேலதிகமாக 73 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை கிழக்கு மாகாண அரசாங்க பாடசாலைகளில் இணைப்பதற்கு அனுமதி வழங்கிய கடிதம் தற்போது மாகாண கல்வியமைச்சுக்கு கிடைத்துள்ளதாக கல்விப்பணிப்பாளர் எம்.டி.எம் நிஸாம் தெரிவித்தார்.