கார்களில் பயணிக்க கட்டாரில் புதிய விதிமுறை

கட்டாரில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனியார் கார்களில் இரண்டுக்கு மேற்பட்டவர்கள் பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமானது நேற்று முன்தின்ம் (24) முதல் அமுலாக்கப்பட்டுள்ளது.

தனியார் கார்களில் சாரதியுடன் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும் என கட்டார் உள்துறை அமைச்சு ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

எனினும் குடும்பங்கள் இதிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இந்த அறிவுறுத்தலை தவறாமல் பின்பற்றும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் கொவிட்-19 க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது பொதுமக்களின் ‘தேசிய மற்றும் தார்மீக கடமை’ என்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435