நாடு முழுவதும் உள்ள கிராமசேவகர்களுக்கு கணனி பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கிராமசேவகர் அலுவலக தரவுகள் கணனி மயப்படுத்தப்படவுள்ளமையினால் இப்பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தரம் 111 கிராமசேவகர்கள் நியமனம் பெற்று மூன்று வருடங்களுக்குள் கணனி அறிவை பெற்றுக்கொள்ள வேண்டும். பயிற்சிக்கான ஆரம்ப கட்டணம் 7000 ரூபாவை வழங்க உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு சமர்ப்பித்த பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, எதிர்காலத்தில் பொது மக்களின் கிராம சேவகர்களால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கு கணனி பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்