கிராமசேவையாளர்கள் சுகயீன லீவு போராட்டத்தில்!

வரலாற்றில் முதற்தடவையாக கிராமசேவகர்கள் இன்று (05) ஒருநாள் சுகயீன லீவு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

17 பிரச்சினைகளை முன்வைத்து இவ்வொருநாள் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

போராட்டத்தின் ஒரு கட்டமாக பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கிராமசேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் கித்சிரி தெரிவித்துள்ளார்.

கிராமசேவையாளர்கள் சேவையில் ஏற்பட்டுள்ள சம்பள பிரச்சினை, பதவியுயர்வு பிரச்சினை, சேவை இணைப்புப் பிரச்சினை உட்பட 17 பிரச்சினைகளை முன்வைத்து இச்சுகயீன லீவு ​போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதுவரை எந்தவொரு காரணத்திற்காகவும் வேலைநிறுத்தப்போராட்டத்தை கிராமசேவையாளர்கள் முன்னெடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய சங்கத்தின் தலைவர் இன்று போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435