கிராம சேவகர்கள் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் காரணமாக அடையாள அட்டை ஒருநாள் சேவையில் 90 சதவீத தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாக கிராம சேவகர்கள் சங்கத்தின் தலைவர் கே.எஸ்.எஸ் கொடிகார தெரிவித்துள்ளார்.
13 கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் சங்கம் இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் இவ்வடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளது. இவ்வேலைநிறுத்தத்திற்கு 6 சங்கங்களின் ஒத்துழைப்புடன் வழங்கியுள்ளன.
அடையாள அட்டை ஒருநாள் சேவையினூடாக நாளொன்றுக்கு 1500 அடையாள அட்டைகள் விநியோகிக்ப்படுகின்றன. எனினும் தற்போதைய சூழ்நிலையில் ஒருநாள் சேவையினூடாக அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தமது கோரிக்கைளுக்கு உரிய பதில் கிடைக்காவிடின் அடுத்தக்கட்ட தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சங்கம் எச்சரித்துள்ளது.