பெண்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பான முறையில் அறிக்கையிடுவதற்காக கையடக்க தொலைபேசியை அடிப்படையாகக் கொண்ட ஒன்றிணைந்த மேடை ஒன்றை அமைப்பதற்க அரசாங்கம் அவதானம் செலுத்திவருகின்றது.
பெண்களுக்கு எதிராக அனைத்து வகையிலும் வேறுபாடு காட்டுதல் பெண்களின் உரிமையை மீறுதல் இடையுறுகள் செய்தல் மற்றும் அனைத்து வகையிலான நடவடிக்கைகள் சந்தரப்பங்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் நிவாரணத்தை வழங்கும் நோக்கில் தொலைபேசி இலக்கம் 1938 ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் மகளிருக்கு உதவும் தொலைபேசி சேவையொன்று அறிவிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடுமுழுவதிலும் உள்ள பெண்களுக்கு 24 மணித்தியாலம் துரிதமாக உடனடி பெறுபேறை பெற்றுக் கொடுப்பதற்கு இந்த தொலைபேசி சேவை மேம்படுத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இடையூறு மற்றும் தாக்குதல்கள் குறித்து தலையிடுவதந்கு அதிகாரிகளுக்கு பாதுகாப்பான வகையில் அறிக்கையிடுவதற்காக கையடக்க தொலைபேசியை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்த மேடையொன்றை அமைப்பதற்காக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மற்றும் வரட்சி வலய அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வேலைத்தளம்