கிளாஸோ தோட்ட வைத்திய அதிகாரிகெதிராக போராட்டம்

நானுஓயா கிளாஸோ தோட்டத்து வைத்திய அதிகாரி சரியான முறையில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்று கூற்று சுமார் 300 இற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக நேற்று (08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்திய அதிகாரி தனது கடமையை சரியான முன்னெடுக்காமையினால் தாம் அதிக சிரமங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டியுள்ள இத்தோட்டத் தொழிலாளர்கள், அவசியமான நேரங்களில் கூட அசமந்த போக்கை மேற்கொள்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் அண்மையில் ஆற்றுக்கு குழிக்கச் சென்ற 17 வயது சிறுவன் சுழியில் சிக்கி உயிரிழிந்ததாகவும் அவ்விடத்துக்கு வருமாறு அழைத்த போதும் தோட்ட வைத்திய அதிகாரி வரவில்லை. இதனை கண்டித்த போதும் கவனத்தி்ற் கொள்ளாத வைத்திய அதிகாரி அநேகமாக தோட்டத்தில் இருப்பதில்லை என்றும் இதனை தோட்ட நிர்வாகம் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை என்றும் அம்மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த வைத்திய அதிகாரி அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு கடன் வழங்கி அதிக வட்டியை அறிவிட்டு தம்மை சுரண்டிப் பிழைப்பதாக கவலை தெரிவித்த கிளாஸோ தோட்டத் தொழிலாளர்கள், கடன் சுமை அதிகமாகி வழங்க முடியாதுள்ள தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்வதுடன் வழக்கும் தொடுக்கிறார் என்றும் அத் தொழிலாளர்கள் கவலை வௌியிட்டுள்ளனர்.

குறித்த வைத்திய அதிகாரியை இடமாற்றம் செய்யும் வரை தமது போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று அத்தொழிலாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435