கிளிநொச்சி கல்வி வலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை

கிளிநொச்சி கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய 257 மாணவர்கள் கல்வி கற்பதாகவும், அவர்களுக்கு கற்பிக்கவென பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் 22 பேரே உள்ளதாகவும் வலயக்கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக வடமாகாணத்தில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு கற்பிக்கவென பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தீவக கல்வி வலயத்தில் 152 விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்பதாகவும், அவர்களுக்கு கற்பிக்கவென பயிற்றப்பட்ட 06 ஆசிரியர்கள் உள்ளதாகவும் தீவக கல்வி வலய தகவல் உத்த்யோகஸ்தர் சாரங்கன் தெரிவித்துள்ளார்.

துணுக்காய் கல்வி வலயத்தில் 42 விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்பதாகவும், அவர்களுக்கு கற்பிக்கவென பயிற்றப்பட்ட 08 ஆசிரியர்கள் உள்ளதாகவும் துணுக்காய் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.பிருந்தா தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கல்வி வலயத்தில் 48 விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்பதாகவும், அவர்களுக்கு கற்பிக்கவென பயிற்றப்பட்ட 08 ஆசிரியர்கள் உள்ளதாகவும் வடமராட்சி கல்வி வலய கல்விப் பணிப்பாளர் யோ. ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்மராட்சி கல்வி வலயத்தில் 27 விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்பதாகவும் , அவர்களுக்கு கற்பிக்கவென பயிற்றப்பட்ட 05 ஆசிரியர்கள் உள்ளதாகவும் தென்மராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ல. லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி , தென்மராட்சி , தீவகம் , கிளிநொச்சி மற்றும் துணுக்காய் ஆகிய ஐந்து கல்வி வலயங்கள் மாத்திரமே டிசம்பர் 31ஆம் திகதி வரையில் பதில் அனுப்பியுள்ளன. ஏனைய யாழ்ப்பாணம் , வலிகாமம் , முல்லைத்தீவு , மன்னார் , மடு , வவுனியா வடக்கு மற்றும் வவுனியா தெற்கு ஆகிய ஏழு கல்வி வலயங்கள் பதில் அனுப்பவில்லை. என்பன பதில் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமூலம்: வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435