கிளிநொச்சி பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு விரைவில்

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 354 பட்டதாரிகளுக்கான நேர்முக தேர்வுகள் எதிர்வரும் 23ம் 24ம்திகதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்டச்செயலகம் அறிவித்துள்ளது.

நாடாளவிய ரீதியில் கடந்த 2016ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட இருபதாயிரம் பட்டதாரிகளை சேவைகளில் இணைத்துக்கொள்ளும் பொருட்டு நேர்முக தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இது தொடர்பில மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் படி 31-12-2016 இற்கு முன்னர் படடப்படிப்பை நிறைவு செய்த கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 354 பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வுகள் எதிர்வரும் 23, 24ம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை பூறாகவும் வேலையற்ற 57 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளதாகவும் இதில் முதற்கட்டமாக இருபதாயிரம் பட்டதாரிகளை சேவைகளில் இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும் இதில் சேவைகளில் இணைத்துக்கொள்ளும் படடதாரிகள் இரண்டு வருட பயிற்சிகாலங்கள் சேவையாற்ற வேண்டும் என்பதுடன் மாதாந்தம் இருபதாயிரம்; ரூபா கொடுப்பனவுகள் வழங்கப்படுவதுடன் வயதெல்லை 35 ஆகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435