கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு அவசர கடிதம்

கடந்த 20.06.2019 அன்று கடமைக்கு அறிக்கையிடாத கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் அதற்கான காரணத்தை கோரி அவர்களிடம் தன்னிலை விளக்கமளிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ஆரணி தவபாலன் கடிதம் அனுப்பியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்களுடாக அவசரமானது எனக் குறிப்பிட்டு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் விளக்கம் கோரல் எனத் தலைப்பிட்டு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கடந்த 20.06.2019 அன்று கடமைக்கு அறிக்கையிடாத சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தன்னிலை விளக்கத்தினை வலய தலைமையக முகாமையாளருக்கு ஊடாக பெற்று தங்களுக்கு ஊடாக அனுப்பி வைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோத்தர்கள் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்துடன் இணைந்து கடந்த 20ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக காலை பத்து மணிக்கு ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் பின்னர் பேரணியாக மாவட்டச் செயலகம் வரை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச அதிபருக்கான மகஜர் மேலதிக மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளில் பொது மக்கள் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தகுதியில்லாதவர்கள் என்று பேசியிருந்தனர். இதற்கு எதிராகவே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே, அதன் பொருளாளர், சிளிநொச்சி சமுர்த்தி சங்கத்தின் தலைவர் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் நிறைவான தகுதியுடன் காணப்படுகின்றனர்.அவர்கள் அனைவரும் தகுதிகான் காலம் நிறைவுற்று அதற்கான உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் அவர்களை தகுதியில்லை என கூறுவதனை நாம் வன்மையாக கண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே, சங்கத்தின் பொருளாலாளர் கிளிநொச்சி சமுர்த்தி சங்க தலைவர் சங்கர், மன்னார் சமுர்த்தி சங்கத்தின் செயலலாளர் கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435